அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக ஜெஃப் பெசோஸ் அறிவித்துள்ளார். கடந்த மூன்று மாதங்களில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உச்சபட்ச விற்பனையை அமேசான் கண்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனத்தின் காலாண்டு நிதி அறிக்கையை வெளியிட்ட பின் இந்த முடிவை பெசோஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமேசான் இந்த இடத்தை பிடித்துள்ளதற்கு புதுமையான சிந்தனையை நோக்கி பயணித்ததே காரணம். புதிய பாதையை நோக்கி அமேசான் பயணிக்க இதுவே சரியான நேரம். எனவே இந்த மாற்றத்தை அறிவிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
பேசோஸின் விலகலை அடுத்து, நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவராக ஆன்டி ஜாஸ்ஸி பொறுப்பேற்க உள்ளார். அதேவேளை, ஜெஃப் பேசோஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவர் பொறுப்பில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 வயதில் ரூ.328 கோடி நிதி திரட்டிய உலகப்போர் நாயகன் டாம் மூர் காலமானார்!