ETV Bharat / international

ஐந்து நாள் அரசு முறை பயணம்: அமெரிக்கா பறந்த அமைச்சர் ஜெய்சங்கர்! - சர்வதேச செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பொறுப்பேற்றப் பின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மேற்கொள்ளும் முதல் அரசு முறை பயணம் இது.

External Affairs Minister Dr. S Jaishankar

author img

By

Published : May 27, 2021, 6:17 PM IST

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே.27) அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். ஐந்து நாள் பயணத்திட்டத்தில் முதல் நாளான இன்று அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் சென்றடைந்த ஜெய்சங்கர், அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டோனி பிலங்கன், பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலைவன் ஆகியரோ சந்திக்கிறார்.

இந்தப் பயணத்தின்போது, இரு நாட்டு கொள்கை உறவு, சர்வதேச அரசியல் சூழல், கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள், வர்த்தக ஒப்பந்தங்கள், காலநிலை மாற்றம், பயங்கரவாத அச்சுறுத்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று நூறு நாள்கள் தாண்டியுள்ள நிலையில், புதிய அரசுடன் இந்திய அரசின் இணக்கம் குறித்து இந்தச் சந்திப்பில் ஆய்வு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சினிமா பாணியில் பத்திரிகையாளர் கடத்தி கைது: பெலாரஸ் நாட்டிற்கு ஜோ பைடன் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.