ஐக்கிய நாடுகள் சபை சார்பில் நடைபெற்ற ஆற்றல் துறை சர்ந்த கருத்தரங்கில் இந்திய சார்பில் தூதர் டி.எஸ். திருமூர்த்தி பங்கேற்றுப் பேசினார். இதில் மாற்று எரிசக்தி உற்பத்தி குறித்து விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கில் திருமூர்த்தி பேசுகையில், "இந்த கருத்தரங்கில் இந்தியாவை முக்கிய பங்கேற்பாளராக அழைத்ததற்கு மிக்க மகிழ்ச்சி. மாற்று எரிசக்தி உற்பத்தி என்ற முன்னெடுப்பை அரசுகள், சிவில் சமூகத்துடன் ஒன்றிணைந்து செயல்படுத்த வேண்டும்.
உலகம் முழுவதும் துய்மையான எரிசக்தி மலிவான விலையில் கிடைக்கும் நிலையை நாம் அடைய வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் ஐநா நிர்ணயித்த மாற்று எரிசக்தி இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரே ஜி-20 நாடு இந்தியா மட்டுமே" என பெருமிதத்ததுடன் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தரங்கில் பிரேசில், சிலே, கொலம்பியா, டென்மார்க், ஜெர்மனி, நைஜீரியா, போலாந்து, ஸ்பெயின், பிரிட்டன் ஆகிய நாடுகளும் பங்கேற்றன.
இதையும் படிங்க: பான்-ஆதார் எண்கள் இணைப்பு மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு