பிரதமர் நரேந்திர மோடியுடன் ஏழு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார்.
இந்நிலையில், 'கவுன்சில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸ்' ( Council on Foreign Relations) என்னும் லாப நோக்கமற்ற அமைப்பு சார்பில் நியூயார்க்கில் நடந்த மாநாட்டில் எஸ்.ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "அடுத்து ஐந்தாண்டுகளில் இந்தியாவில் மனித வளர்ச்சி குறியீடுகள் வளர்ச்சிக் காணும் என நம்பிக்கையாக உள்ளோம். வளம் குன்றாத வளர்ச்சி இலக்கின் (Sustainable Development Goals) அடிப்படையில் இதனை அடைவோம்.
சீனா, ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்டு வளர்ச்சிப் பாதையில் செல்லாமல், இந்தியாவுக்கென தனியொரு வளர்ச்சிப் பாதையை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
2014 லிருந்த இந்தியாவை விட, தற்போதுள்ள இந்தியா முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக உள்ளது. நாட்டில் ஏற்பட்ட நம்பத்தகுந்த வளர்ச்சியின் சின்னமாக பிரதமர் மோடி விளங்குகிறார். இதனை ஏற்றுக்கொள்ளும் இந்திய மக்கள் அவர் மீது தொடர் நம்பிக்கையாக உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க: 'பிரதமர் நரேந்திர மோடிதான் இந்தியாவின் தந்தை': ட்ரம்ப் புகழாரம்!