ETV Bharat / international

ஹாங்காங் போராட்டம்: சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு உதவிக்கரம் நீட்டும் ட்ரம்ப் - ஹாங்காங் போராட்டம்: சீனாவின் ஷி ஜிங்பிங்குக்கு உதவி கரம் நீட்டும் ட்ரம்ப்

வாஷிங்டன்: ஹாங்காங் போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்கு சீன அதிபர் ஸி ஜின்பிங்கை தான் சந்திக்க விரும்புவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

donald trump hong kong protest
author img

By

Published : Aug 15, 2019, 11:28 AM IST

Updated : Aug 15, 2019, 11:41 AM IST

ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை காக்க வலியுறுத்தியும் ஹாங்காங் அரசை எதிர்த்து கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதில், ஏராளமான பொதுமக்கள், காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தால் ஹாங்காங் பொருளாதாரம் நலிவடைந்துள்ளதாக அந்நாட்டு நிர்வாகத் தலைவர் கேரி லாம் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டத்துக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஹாங்காங் எல்லையில் துணை ராணுவப்படையினரை சீனா நிறுத்திவைத்திருப்பதாக, சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன துணை ராணுவப் படையினர், china paramilitary force, ஹாங்காங் போராட்டம், hongkong protest
சீன துணை ராணுவப் படையினர்

இதனிடையே, ஹாங்காங் போராட்டம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளதாவது, சீன அதிபர் ஸி ஜின்பிங் தலைசிறந்த தலைவர் என்பதையும், அந்நாட்டு மக்கள் மீது அவர் கொண்டிருக்கும் மரியாதையையும் நான் அறிவேன்.

ஹாங்காங் விவகாரத்தை ஸி ஜின்பிங் துரிதமாகவும், மனிதத்தன்மையோடும் தீர்த்துவைப்பார் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகமில்லை. இதுகுறித்து ஆலோசிப்பதற்கு அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Aug 15, 2019, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.