ETV Bharat / international

ஜோ பிடனுக்கு ஆதரவாக களமிறங்கிய முன்னாள் அதிபர் வேட்பாளர்

author img

By

Published : Apr 29, 2020, 1:39 PM IST

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடனுக்கு ஆதரவாக முன்னாள் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Joe Biden
Joe Biden

அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் களம் காணவுள்ளார். ட்ரம்ப்புக்கு எதிரான போட்டியில் களம் காணவுள்ள அவருக்கு முன்னாள் அதிபர் ஒபாமா உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஹிலாரி கிளிண்டன் பிடனுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் பிடனுடன் பேசிய ஹிலாரி, "நீங்கள் அதிபராக வேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதரவாக நான் கருத்துக் கூற விரும்புகிறேன். நீங்கள் இப்போது அதிபராக இருந்திருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இந்தத் தருணத்திற்காகத்தான் பிடன் தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தார். உங்களுடன் சேர்ந்து வேலை செய்ததில் பெருமை கொள்கிறேன்.

தொலைக்காட்சியில் விளையாடாமல் உண்மையாக உழைக்கும் பிடன் போன்ற ஒருவர், அதிபராக இருந்திருந்தால், என்ன நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இம்மாதிரியான சூழலில் புனைகதைகளுக்கு அல்லாமல், அறிவியலுக்கு முக்கியத்துவம் தரும் பிடன் அதிபராக இருந்திருந்தால், என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். நம் அனைவரையும் அவர் ஒன்றிணைத்துள்ளார்" என்றார்.

இதையும் படிங்க: போரைவிட கரோனாவில் அதிகம்: அமெரிக்காவின் துயர நிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.