ஈரான் நாட்டின் முதன்மைத் தலைவர் அயதுல்லா அலி கமேனி வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் அமெரிக்கா நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துப் பேசினார். மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் விமர்சித்திருந்தார்.
இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்துள்ளார். அதில், 'உங்களின் பொருளாதாரம் சீரழிந்து காணப்படுகிறது. மக்கள் துன்பப்படுகின்றனர். உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை' எனத் தெரிவித்தார்.
ஈரான் நாட்டின் தளபதி காசிம் சுலைமானியை இரு வாரங்களுக்கு முன்னர், அமெரிக்க ஆளில்லாத விமானத் தாக்குதல் நடத்தி, கொன்றது. இதையடுத்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் சூளும் அபாயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒரே பாணியில் அமெரிக்காவும் ஈரானும்!