ETV Bharat / international

நிறவெறி சர்ச்சையில் இங்கிலாந்து அரச குடும்பம்-மேகன் மெர்கல் கண்ணீர் பேட்டி - மேகன் மெர்கல் தற்கொலை எண்ணம்

இங்கிலாந்து அரச குடும்பத்தினர் குறித்து இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியினர் அளித்துள்ள பேட்டி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Meghan Markle
Meghan Markle
author img

By

Published : Mar 8, 2021, 4:27 PM IST

இங்கிலாந்து அரச குடும்பம் சர்வதேச அரங்கில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. மகாராணி எலிசபெத்தின் இளைய பேரனான இளவசர் ஹாரி, மேகன் மெர்கல் என்ற அமெரிக்க நடிகையை 2018ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்துகொண்டர். இந்த தம்பதி கடந்தாண்டு மார்ச் மார்ச் மாதம் யாரும் எதிர்பாராத விதமாக அரச குடும்பத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

மேகன் மீது நிறவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி, அதற்கு வருத்தம் தெரிவித்து இங்கிலாந்தை விட்டு வெளியேறிய இருவரும், தற்போது அமெரிக்காவில் வாசம் செய்துவருகின்றனர்.

இந்த சூழலில் ஹாரி - மேகன் தம்பதி அமெரிக்காவின் ஊடகப் பிரலமான ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டி சர்ச்சைத் தீயைக் கிளப்பியுள்ளது.

பிரிட்டன் அரண்மனையில் வசித்த சில காலத்தில், தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தெரிவித்த மேகன், ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணத்திற்கு தள்ளப்பட்டதாகவும் கூறினார்.

ஆப்ரிக்க-அமெரிக்கரான மேகன் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் தோல் நிறம் குறித்து பிரிட்டன் அரச குடும்பத்தினர் கவலைப்பட்டதாகவும், ஹாரி - மேகனை அரச குடும்பம் பல விதங்களில் நெருக்கடிக்குள்ளாக்கியதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

அரச குடும்பம் தனது நிதி ஆதாரங்களை முடக்கி, பாதுகாப்பை விலக்கிக்கொண்டதாக நேர்காணலின் போது புகார் தெரிவித்த இளவரசர் ஹாரி, அரச குடும்பம், தனது மனைவிக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்ததாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரிட்டன் அரச குடும்பத்தினர் மீது நிற சார்ந்த புகாரை குடும்பத்தைச் சேர்ந்த இளவரசரும், அவரது மனைவியுமே தெரிவித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

பெரும்பாலும் அடித்தட்டு மக்களைப் பாதிக்கும் நிறவெறிக்கு அரச குடும்பத்தினரும் தப்பவில்லை என்பது இவ்விவகாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதையும் படிங்க: 'சுந்தர் பிச்சையின் மகளிர் தின பரிசு' - கிராமப்புற பெண்களுக்காக ரூ.182 கோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.