சான் பிரான்சிஸ்கோ (அமெரிக்கா): ஜோ பைடன் குழு அவர் அமெரிக்க அதிபராக பதவியேற்க போகும் நிகழ்வை, ஸ்னாப்சாட் லென்ஸ் எனுன் மெய்நிகர் தொழில்நுட்ப வசதியைக் கொண்டு நேரலையாக ஒளிபரப்பவுள்ளனர்.
“ஹேய் ஸ்னாப்சாட்!! இட்ஸ் மீ, ஜோ பைடன்... வெல்கம் டு தி இன்னாக்ரேஷன்” எனும் வாசகம் பயனர்களுக்கு அறிவிக்கையாக அனுப்பப்படும். இதன்மூலம் பயனர்கள் அதிபர் பதவியேற்பு விழாவை கண்டுகளிப்பதுடன், புகைப்படங்களையும் தங்களை இணைத்து எடுத்துக்கொள்ளலாம். அதாவது வீட்டிலிருந்தபடியே பதவியேற்பு விழாவில் நேரடியாக கலந்துகொள்ள முடியுமாம்.
பைடனின் அதிபர் பதவிக் காலம் எப்படி இருக்கும்?
அமெரிக்காவில் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் களமிறங்கிய ஜோ பைடன் அதிபராகவும், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றிக் கனியை சுவைத்தனர். இதன் தொடர்ச்சியாக, இன்று இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது.