இசை உலகின் ஆஸ்கர் விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் அமெரிக்காவிலுள்ள ரெக்கார்டிங் அகாதமியால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
உலகளவிலான சிறந்த இசைக்கலைஞர்களுக்கு கிராமி விருதுகள் வழங்கப்படும். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் இந்த விழாவில் இசைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான பங்காற்றிய ஜாம்பவான்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
இந்த மாதம் நடைபெற வேண்டிய 63ஆவது ஆண்டுக்கான கிராமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிராமி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்ச்சி வரும் மார்ச் 14ஆம் தேதி தடையின்றி நடைபெறும் எனவும் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இங்கிலாந்து பிரதமரின் இந்தியப் பயணம் ரத்து - காரணம் என்ன தெரியுமா?