சான் பிரான்சிஸ்கோ: ஸ்டாஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து செய்தியாளர்களுக்கு பயன்தரும் வகையில் கோவிட்-19 குறித்த தகவல் தளம் அடங்கிய கோவிட்-19 உலக வரைபடம் எனும் தளத்தை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
176 நாடுகளின் மக்கள் தொகை, கரோனா பதிப்பு எண்ணிக்கை, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை என அனைத்து தகவல்களும் இதில் அடங்கியுள்ளன. இந்த தகவல்களை எந்தவொரு இணைதளத்திலும் உள்ளீடு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.