சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கோவிட்-19 இரண்டாம் அலை தாக்கம் மோசமடைந்துவருகிறது. இதுவரை ஆறு கோடியே 92 லட்சத்து 60 ஆயிரத்து 044 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 151ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியே 80 லட்சத்து 13 ஆயிரத்து 832ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஆறு லட்சத்து 91 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 ஆயிரத்து 019 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அதிக கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இரண்டாம் அலைத் தாக்கம் அந்நாட்டில் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. இதுவரை அந்நாட்டில் ஒரு கோடியே 58 லட்சத்து 20 ஆயிரத்து 042 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 96 ஆயிரத்து 698 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. அதேவேளை உயிரிழப்பு அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்திலும், இந்தியா மூன்றாம் இடத்திலும் உள்ளது.
பிரேசில் நாட்டில் தற்போது நோய்த்தொற்று எண்ணிக்கை 67 லட்சத்து 30 ஆயிரத்து 118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 032 ஆக உள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகள் போராட்டம் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையா? குழப்பிய இங்கிலாந்து பிரதமர்!