சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டாலும் தற்போது பல்வேறு நாடுகளிலும் பரவி அந்நாடுகளை சிறைப்பிடித்திருக்கிறது. இதுவரை 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இப்பெருந்தொற்றால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 92, 899 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், உலகளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,08,290இலிருந்து 34,01,189ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் நேற்று 5496 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதன்மூலம், உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 2,34,108லிருந்து 2,39,604ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, நேற்று ஒரேநாளில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 38,798 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர். இதனால், உலகம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10,42,841இல் இருந்து 10,81,639ஆக அதிகரித்துள்ளது.
மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில்தான் இத்தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் உள்ளனர். அந்நாட்டில் இதுவரை 11,31,452 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 65,776 பேர் உயிரிழந்துள்ளனர். கோவிட்-19 தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் |
அமெரிக்கா | 11,31,452 | 65,776 |
ஸ்பெயின் | 2,42,998 | 24,824 |
இத்தாலி | 2,07,428 | 28,236 |
பிரிட்டன் | 1,77,454 | 27,510 |
பிரான்ஸ் | 1,67,346 | 24,594 |
ஜெர்மனி | 1,64,077 | 6,736 |
துருக்கி | 1,22,392 | 3,258 |
ரஷ்யா | 1,14,431 | 1,169 |
ஈரான் | 95,646 | 6,091 |
பிரேசில் | 92,202 | 6,412 |
இதையும் படிங்க: இறந்துவிட்டாரா வட கொரியா அதிபர்? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி