கரோனா வைரஸ் (கோவிட்-19) பெருந்தொற்று சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கியது. தற்போது இத்தொற்று சீனாவில் குறைந்திருந்தாலும் மற்ற நாடுகளில் வேகமாக பரவியுள்ளது.
இந்நிலையில், நேற்று ஒரேநாளில் புதிதாக 88,022 பேருக்கு இத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,08,290ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 5,884 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,34,108ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே, இத்தொற்றால் இதுவரை 10,42,841 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தொற்றால் அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்பும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இதுவரை 10,95,210 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 63,861 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில், இதுவரை 35,403 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,147 பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவிட்-19 தொற்றால் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்ட முதல் 10 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:
நாடுகள் | பாதிப்புகள் | உயிரிழப்புகள் |
அமெரிக்கா | 10,95,210 | 63,861 |
ஸ்பெயின் | 2,39,639 | 24,543 |
இத்தாலி | 2,05, 463 | 27,967 |
பிரிட்டன் | 1,71,253 | 26,771 |
பிரான்ஸ் | 1,67,178 | 24, 376 |
ஜெர்மனி | 1,63,009 | 6,623 |
துருக்கி | 1,20,204 | 3,174 |
ரஷ்யா | 1,06, 498 | 1,073 |
ஈரான் | 94, 640 | 6,028 |
சீனா | 87, 187 | 6,006 |
இதையும் படிங்க: கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ரெமடிசிவர்!