கோவிட் -19 தொற்று சீனாவில் பரவத் தொடங்கியிருந்தாலும் அதன் மையப் பகுதியாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸும் மாறிவிட்டன. கடந்த ஜனவரி மாதம் இத்தொற்றால் உலகளவில் முதல் உயிரிழப்பு பதிவானது. அதன்பிறகு இத்தொற்றின் தாக்கம் தீவிரமடைந்ததால் உலகளவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்துவருகின்றனர்.
இத்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகளும் தடுமாறிவருகின்றன. இந்த நிலையில், உலகளவில் நேற்று ஒரேநாளில் கோவிட் 19 தொற்றால் 8,710 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,261ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம் வெளியிட்ட தகவலின்படி, "உலகளவில் முதல் 50 ஆயிரம் உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ 83 நாள்கள் ஆன நிலையில், அடுத்த 16 நாள்களில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம், நேற்று ஒரேநாளில் புதிதாக 67,928 பேருக்கு கோவிட் 19 தொற்று இருப்பது உறுதியானதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,50,751ஆக அதிகரித்துள்ளது. இத்தொற்றால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 5,71,383ஆக உயர்ந்துள்ளது. உலகளவில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில்தான் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
உலகளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரம் பின்வருமாறு:
நாடு | பாதிப்பு | உயிரிழப்பு |
அமெரிக்கா | 7,10,021 | 37,158 |
ஸ்பெயின் | 1,90,839 | 20,002 |
இத்தாலி | 1,72,434 | 22,475 |
பிரான்ஸ் | 1,47,969 | 18,681 |
ஜெர்மனி | 1,41,397 | 4,352 |
பிரிட்டன் | 1,08,692 | 14,576 |
இதையும் படிங்க: இந்தியாவுக்கு ஐ.நா. தலைவர் சல்யூட்