பிரேசிலில் கல்விக்கு ஒதுக்கப்பட்டு வந்த சுமார் ரூ. 618 கோடி நிதியை ரத்து செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இது கடந்த மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது.
பிரேசில் அரசின் இந்த முடிவுக்கு எதிராக மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாவோ பாலோ, ரியோ டி ஜெனிரோ ஆகிய நகரங்களில் போராட்டத்தில் களமறிங்கியுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவி ஒலிவெரா சாண்டோஸ் பேசுகையில், " இந்த நாட்டின் எதிர்காலமே கல்வியை நம்பிதான் உள்ளது. ஆகையால் தற்போது நடைபெற்றுவரும் போராட்டம் மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் வீதிகளில் இறங்கியுள்ளதை அரசுக்கு உணர்த்தும்" என்றார்.