ETV Bharat / international

புளோரிடா மாலில் வெடிவிபத்து: 21 பேர் காயம் - பிளான்டெஷன்

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வர்த்தக அங்காடி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 21 பேர் காயமடைந்தனர்.

florida
author img

By

Published : Jul 7, 2019, 11:17 AM IST

அமெரிக்காவின் தென்-கிழக்கு கடலோர மாகாணமான புளோடிவில் உள்ளது பிளான்டேஷன் நகரம். இங்கு வர்த்தக அங்காடியில் உள்ள உணவகத்தில், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.

இதனால், அந்த உணவகம் அமைந்திருந்த கட்டடம் சுக்கு நூறாய் நொருங்கி விழுந்து, அந்த இடமே தூசியும், புகை மண்டலமாய் காட்சியளித்தது. இதில், குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசாமக எந்த உயர்சேதமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

மேலும், உணவகத்திற்கு அருகே நின்றுகொண்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உணவகத்தில் இருந்த எரிவாயு குழாய் உடைந்து விபத்து நடத்திருக்கலாம் என அந்நகர அரசு அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:Body:

 FLorida Fire

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.