ETV Bharat / international

கனடாவில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

five-indian-students-killed-in-road-mishap-in-canada

author img

By

Published : Mar 14, 2022, 9:39 AM IST

கனடாவின் டொராண்டோவில் மார்ச் 12ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் ஐந்து உயிரிழந்தாகவும், இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கனடாவின் இந்திய தூதர் அஜய் பிசாரியா தெரிவித்தார்.

இதுகுறித்து பிசாரியா தனது ட்விட்டர் பக்கத்தில், "கனடாவின் டொராண்டோ அருகே சனிக்கிழமை நடத்த வேன் விபத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களை தொடர்ந்து கண்காணித்துவருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து குயின்ட் வெஸ்ட் ஒன்டாரியோ மாகாண காவல்துறை தரப்பில், உயிரிழந்த மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான், பவன் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற வேன் மீது டிராக்டர்-டிரெய்லர் மோதியதால் விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்தோனேசியா, மலேஷியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.