உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் உலகமே திணறி வருகிறது. அதேபோல் இந்தத் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் பல்வேறு நாடுகளும் திணறுகின்றனர்.
நமது உடலில் எந்தவொரு வைரஸ் பாதித்தாலும் நமது உடலில் இருக்கும் சைட்டோகைன் ஸ்ட்ராம், சில நோய் எதிர்ப்பு புரதங்களை நமது உடலிலேயே தயார் செய்து அனுப்பும். அந்த எதிர்ப்பு புரதங்களால் நமது உடலில் இருக்கும் வைரஸ்கள் எளிதாக செயலற்றுப்போகும்.
ஆனால், கரோனா வைரஸ் தொற்று பாதித்தால், நமது உடலில் இருக்கும் சைட்டோகைன் ஸ்ட்ராம் அனுப்பும் புரதங்கள் கிட்னியை பாதிப்படையச் செய்கின்றன.
இதனை சரிசெய்ய அமெரிக்காவைச் சேர்ந்த ஹுயூமானிஜென் (Humanigen) நிறுவனம் சார்பாக சைட்டோகைன் ஸ்ட்ராமை (Cytokine Storm) சரி செய்ய லென்சிலுமாப் (lenzilumab) என்னும் மருந்தைக்கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த மருந்து தற்போது கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்கு செலுத்தப்பட்டு ஆய்வு நடந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் சார்பாக பேசிய உயர் செயல் அதிகாரிகள், ''லென்சிலுமாப் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் ஆபத்தான நிலையில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் நோக்கில், உலகின் தலைசிறந்த மருத்துவ ஆய்வு நிறுவனங்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை லென்சிலுமாப் மருந்தினைக் கொண்டு சிகிச்சையளித்ததற்காக பல பாராட்டுகள் வந்துள்ளன. தற்போது இந்த லென்சிலூமாப்பை வைத்து ஆய்வு செய்வதற்கு சில பங்குதாரர்களை எதிர்நோக்கியுள்ளோம்.
எஃப்டிஏ ஒப்புதல் மற்றும் தள செயலாக்கம் ஆகியவற்றுக்கு நாங்கள் எடுத்துக்கொண்ட நேரம் எங்களுக்கு நிறைவாக உள்ளது. சைட்டோகைன் ஸ்ட்ராமைப் பற்றி கடந்த மூன்று ஆண்டுகளாக பல ஏற்றுக்கொள்ளத்தக்க வெளியீடுகளை கொடுத்துள்ள நிறுவனம் நாங்கள் மட்டுமே. எங்களின் ஆய்வுக்காக நோயாளிகளை சரியான நேரத்தில் வழங்கிய எஃப்டிஏ, சிடிஐ மற்றும் எங்கள் பங்குதாரர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.