ETV Bharat / international

அமெரிக்க பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் - விசாரணையைத் தொடங்கிய எஃப்.பி.ஐ! - ட்விட்டர் கணக்கு

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் பல உயர்மட்ட அரசியல் பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை எஃப்.பி.ஐ(Federal Bureau of Investigation- FBI) தொடங்கியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal - WSJ) தெரிவித்துள்ளது.

அமெரிக்க பிரமுகர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரம் - விசாரணையைத் தொடங்கிய எஃப்.பி.ஐ!

author img

By

Published : Jul 18, 2020, 6:28 AM IST

Updated : Jul 20, 2020, 10:20 AM IST

கடந்த புதன்கிழமை (ஜூலை 15ஆம் தேதி) அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலோன் மஸ்க், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அலுவலர் உள்ளிட்ட முக்கிய நபர்களின் ட்விட்டர் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டன.

சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பெரும் இணையவழித் தாக்குதல் குறித்து விசாரணையை மேற்கொள்ளும் பொறுப்பு எஃப்.பி.ஐ(Federal Bureau of Investigation- FBI)யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இது தொடர்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில், "ட்விட்டர் நிறுவனத்தின் அமைப்புகளில் நிலவும் குறைபாடுகள், சர்வதேச பாதுகாப்புக்குப் பரந்த ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை எழுந்துள்ளது.

இதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அமெரிக்காவின் தலைமை உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான எஃப்.பி.ஐயிடம் இது குறித்த விசாரணையைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மணிக்கணக்கில் நீடித்த இந்த ஹேக் குறித்து ட்விட்டர் சமூக வலைதளம் விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், பாதுகாப்பு வல்லுநர்கள் இந்தத் தாக்குதல் நிறுவனத்தின் உள் கணக்கு-மீட்டமைப்பு அமைப்புகளில் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அவை பயனர்கள் தங்களது கணக்குகளை இழந்தபின்னர், தங்கள் கணக்குகளுக்கான அணுகலை மீண்டும் பெற, உடனடியாக உதவும் வகையில், வடிவமைக்கப்பட வேண்டும்.

எஃப்.பி.ஐ யின் விசாரணைக்கு ட்விட்டர் நிறுவனம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் ஹேக்கர்கள் சமூக பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்தினர் என்று வல்லுநர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

ஊழியர்கள் ஒரு இணைப்பைக் கிளிக் செய்வதிலும், தகவல்களை வெளியிடுவதிலும் அல்லது வெளி நபர்களுக்கு உதவுவதிலும் இந்த வகை ஹேக்கர்களால் எளிதில் ஏமாற்றப்படுகிறார்கள்.

ட்விட்டர் ஹேக் செய்யப்படுவது, இது முதல் முறை அல்ல. கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ட்விட்டர் கணக்கு 11 நிமிடங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.

ட்விட்டர் ஹேக் தொடர்பாக எஃப்.பி.ஐ. தன்னைத் தொடர்பு கொண்டதாக சைபர் சர்வீசஸ் நிறுவனமான யூனிட் 221 பி-யின் தலைமை ஆராய்ச்சி அலுவலர் அலிசன தகவல் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க செனட்டர் ஜோஷ் ஹவ்லி, ட்விட்டரை கூட்டாட்சி சட்ட அமலாக்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும்; அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களின் இணைய கணக்குகள் என ஹேக்கிங் மேலும் விரிவடைவதற்கு முன்னர் தளத்தைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jul 20, 2020, 10:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.