அமெரிக்காவின் தலைமை பெருந்தொற்று நிபுணரான ஆன்டனி பவுச்சி இது குறித்து விசாரணை நடத்த தீவிரமான முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகிறார். அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பான ஆவணங்களைத் திரட்டி, அதன் மூலம் உண்மையை கண்டறிய அமெரிக்க ஆராய்சி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
மேலும், இந்த வைரஸ் பரிசோதனை மையத்திலிருந்து வெளியேறவில்லை என்பதை உறுதி செய்யும் விதமாக வுகானில் முதல் முதலில் பாதிப்புக்குள்ளான ஒன்பது நபர்களின் முழு மருத்துவ அறிக்கையை வெளியிட வேண்டும் என ஆன்டனி பவுச்சி இப்போது அழுத்தம் அளித்துள்ளார்.
இந்த ஒன்பது பேரில் மூன்று பேர் வுஹான் பரிசோதனை மையத்தில் பணியாற்றியவர்கள் என்பதால் இவர்களின் மருத்துவ அறிக்கையை திரட்டுவதில் அமெரிக்கா முனைப்பு காட்டிவருகிறது.
கோவிட்-19 வைரஸ் பரவலுக்கு காரணமாக சீனா அரசு ஐந்து லட்சம் கோடி டாலர் இழப்பு தொகை தர வேண்டும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது அறிக்கையில் வலியுறுத்தியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ரஷ்யா, செர்பியாவை இணைத்த ஸ்புட்னிக் தடுப்பூசி!