ETV Bharat / international

இஸ்லாமிய நாடுகளுக்கு விதித்த தடையை அகற்றும் பைடன்!

author img

By

Published : Jan 21, 2021, 12:28 PM IST

பதவி ஏற்றதும் முதல் வேலையாக, முஸ்லிம் நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்வதைத் தடுக்கும் உத்தரவு, பருவநிலைக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது உள்பட ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவுகளையும் உத்தரவுகளையும் ரத்து செய்வதுடன், கரோனா வைரஸைத் தடுக்க பல புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பைடன் தயாராகியுள்ளார்.

Joe Biden
ஜோ பைடன்

அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற உடனேயே, பல அதிரடி முடிவுகளை எடுக்க முடிவுசெய்துள்ளார், பைடன். அதில் முக்கியமாக டொனால்ட் ட்ரம்ப் எடுத்த சர்ச்சைக்குரிய முடிவுகளை ரத்து செய்து பரபரப்பை ஏற்படுத்த தயாராகிவிட்டார்.

2017ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற சில வாரங்களிலேயே, பல தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார் ட்ரம்ப். அதில் ஒன்றுதான், ஏழு முக்கியமான முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை. ஏகப்பட்ட குழப்பங்களுக்கு இடையே பலமுறை இந்த முடிவை திருத்தி அமைத்து வெளியிட்டுக்கொண்டே இருந்தார் ட்ரம்ப். கடைசியாக, 2018ஆம் ஆண்டு இந்த முடிவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

முதன்முறையாக தடை உத்தரவு வெளியானபோது ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் நாடுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் அடுத்த உத்தரவில் வெனிசுலா, மற்றும் வட கொரியாவுக்கும் இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மூன்றாவதாக வெளியிடப்பட்ட தடை உத்தரவில் நைஜீரியா, சூடான் மற்றும் மியான்மர் நாடுகளும் பட்டியலில் இணைந்தன.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையில், ட்ரம்ப் விதித்த இந்த முக்கிய உத்தரவைதான் அதிபரானால் ரத்து செய்வேன் என்று பைடன் அறிவித்திருந்தார். வெறுப்பை உமிழக்கூடிய இதுபோன்ற உத்தரவை ரத்து செய்து சட்டம் கொண்டுவரப்படும் என்றும், இன பாகுபாட்டுகளையும் கலையும் விதமாக மதச்சார்பற்ற சட்டம் இயற்றப்படும் என்றும் அப்போது அவர் அறிவித்திருந்தார்.

யாரெல்லாம் பாதிக்கப்பட்டார்கள்?

ட்ரம்பின் இந்த உத்தரவால் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக அமெரிக்காவில் தற்காலிகமாக நிழல் தேட நினைக்கும் அகதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

அமெரிக்காவில் வசிக்கும் முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் இந்த உத்தரவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளானார்கள். தடை உத்தரவு பட்டியலில் இருந்த நாடுகளில் உள்ள, தங்களது சொந்தங்களுக்கு விசா கிடைக்காது என்பதால் அவர்களை காண முடியாமல் அவதிப்பட்டார்கள்.

தடை செய்யப்பட்ட முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மட்டுமின்றி, தடை உத்தரவுக்கு உட்படாத நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் பயணிகளும் விசா கிடைப்பதில் பெரும் சிக்கல்களை சந்தித்ததால், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.

முஸ்லிம் தடை சட்டமானது சோமாலியா, சிரியா, ஏமன் மற்றும் சூடான் நாட்டு குடிமக்களை மிகப் பெரிய அளவில் பாதித்தது. இவர்கள் ’தற்காலிகமாக பாதுகாக்கப்பட்ட நிலை’ என்ற கட்டமைப்புக்குள் இருந்ததால், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு அல்லது அங்கிருந்து வெளியே செல்வதற்கு முடியாமல் திணறினர்.

இதுமட்டுமின்றி போர், இயற்கை சீற்றம் மற்றும் பல்வேறு பேரிடர்களை சந்தித்த நாடுகளிலிருந்து வெளியேறிய மக்கள் அமெரிக்காவிற்குள் தரையிறங்குவதற்கும் இந்த கட்டமைப்பானது தடை விதித்திருந்தது.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் மாணவர்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாமல் இழப்புகளை சந்தித்தனர்.

பயணத் தடை உத்தரவால் ஏற்பட்ட பாதிப்புகள்

பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடை உத்தரவால் 13 நாடுகள் மிகப் பெரும் பாதிப்பை சந்தித்தன. ஈரான், லிபியா, சிரியா, ஏமன், வெனிசூலா, வடகொரியா, நைஜீரியா, மியான்மர், எரித்திரியா, கிர்கிஸ்தான், சூடான் மற்றும் தான்சானியா ஆகிய நாடுகள் பெரும் இழப்புகளை சந்தித்தன.
இது தொடர்பாக டைம் பத்திரிக்கை ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 1 2015 தொடங்கி செப்டம்பர் 30 2019 வரை, ஈரான் நாட்டினருக்கு மட்டும் 79% விசாக்கள் மறுக்கப்பட்டன.

சோமாலியா நாட்டினருக்கு 74%, ஏமன் நாட்டினருக்கு 66% விசாக்கள் மறுக்கப்பட்டன.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் நடத்திய பிரிட்ஜ் நடவடிக்கையானது, இந்த ரத்து உத்தரவை இஸ்லாமோஃபோபியா என குறிப்பிட்டிருந்தது. கடந்த ஜனவரி 2019 இல் வெளியிடப்பட்ட லிபர்டேரியன் காட்டோ அறிக்கையின்படி, மொத்தம் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மனைவிகள் மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், அமெரிக்காவிலுள்ள தங்களது கணவரையும் பெற்றோரையும் காணமுடியாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், ஏமன் நாட்டைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற மஹ்மூத் சலீம் என்பவர், தனது மனைவி மற்றும் குழந்தைகள் அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது மிகுந்த பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.

மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதா?
அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையால், அமெரிக்காவிலும் மிகப்பெரிய சலசலப்புகள் ஏற்பட்டன. முஸ்லிம்கள் மீதும் கருப்பினத்தவர் மீதும் மிகப்பெரிய அளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முக்கிய நகரங்கள் மட்டுமின்றி, பல்வேறு சிற்றூர்களிலும் தெருக்களில் நடந்து சென்ற முஸ்லிம்கள் மற்றும் கருப்பினத்தவர்கள் காரணமின்றி தாக்கப்பட்டனர்.

இந்தப் பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த ஆண்டு மேலும் ஒரு சட்டமும் இயற்றப்பட்டது. அகதிகளின் மறுவாழ்வை மறுப்பதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இனவெறி பாகுபாடு அதிகரிப்பதோடு இடம்பெயர்வதற்கான சுதந்திரமும் முற்றிலும் பறிக்கப்படுவதாக, ஏராளமான குற்றச்சாட்டுகள் வெடித்தன. இந்த கொள்கை முடிவானது நீதிமன்றத்தால் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

எளிதாக திரும்ப பெற முடியுமா?
இந்தத் தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படும் சூழல் உருவாகி இருந்தாலும், பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், முஸ்லிம்கள் மற்றும் அமெரிக்காவிற்குள் குடியேறிய ஏராளமானோர் அச்சத்தில் உள்ளனர். இனப்பாகுபாடு அச்சுறுத்தல் அவ்வளவு எளிதாக அகற்றப்படாது என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். ஆனாலும் தடை உத்தரவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளானவர்கள், தற்போது நிம்மதி பெரு மூச்சு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.