சீனாவின் சினோவாக் ஆய்வகத்தின கரோனா தடுப்பூசி சோதனைகள் பிரேசிலில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், சோதனையில் ஒருவருக்கு கடுமையான பக்க விளைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இதைக் கருத்தில்கொண்டு, பிரேசில் தேசிய சுகாதார கண்காணிப்பு நிறுவனமான அன்விசா, சினோவாக் ஆய்வகத்தின் தடுப்பூசி சோதனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும், பக்க விளைவுகள் குறித்து விவரங்கள் வெளியாகவில்லை.
இந்தத் திடீர் தடுப்பூசி சோதனை நிறுத்தமானது, அமெரிக்கா தடுப்பூசி உற்பத்திக்கு வழிவகுக்கிறது. ஏற்கனவே, பைசர் தயாரித்த தடுப்பூசி 90 விழுக்காடு கரோனா தொற்றை அழிக்கும் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பரிசோதனையில் சைபர் மருந்துகள் உள்ளன.