ETV Bharat / international

வைரஸ் தொற்றில் நாங்கள் முதலிடமல்ல - சீனாவைச் சீண்டும் ட்ரம்ப்

author img

By

Published : Apr 19, 2020, 3:29 PM IST

வாஷிங்டன்: கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சீனா வெளியிட்டுள்ள தரவுகள் நம்பும்படி இல்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Trump
Trump

கோவிட்-19 தொற்றால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைச் சமீபத்தில் சீனா மறுமதிப்பீடு செய்தது. அதில் முன்னர் வெளியிட்ட தரவுகளைவிட 1,300 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளதாகச் சீனா அறிவித்தது.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா அல்ல, சீனா என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் சீனா மிக மிக அதிகம்.

சுகாதாரத் துறையில் வளர்ந்த நாடுகளாக இருக்கும் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கும்போது சீனாவில் மட்டும் இறப்பு விகிதம் 0.33ஆக இருக்கிறது. இது நம்பும்படி இல்லை. எனவே, சீனாவில் இறப்பு விகிதம் என்பது அவர்கள் வெளியிட்ட தரவுகளைவிட மிக அதிகமானதாகவே இருக்கும்.

இது எனக்கும் தெரியும்; உங்களுக்கும் தெரியும், ஆனால் நீங்கள் இதைச் செய்தியாக வெளியிடுவதில்லை. இது குறித்து நீங்கள் விளக்க வேண்டும், இல்லையென்றால் ஒரு நாள் நானே இதை விளக்க நேரிடும்" என்றார்.

அமெரிக்காவில் உயிரிழப்புகள் அதிகமாக இருப்பது பற்றி கேட்ட கேள்விக்கு, "மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது உயிரிழப்பு விகிதம் என்பது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்காவில் குறைவாகவே இருக்கிறது" என்றார்.

அமெரிக்காவில் இதுவரை ஏழு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 39,015 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: நியூயார்க்கில் திரும்பும் நம்பிக்கையின் கீற்று!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.