கனடா: கரோனாவை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு கனடா நாட்டு அரசாங்கம் 60 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள கனடா நாட்டு அமைச்சர் கரினா கவுட்," கனடா நாட்டு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 60 கோடி ரூபாய் வழங்குகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்நாட்டுப் பிரதமர் ஜஷ்டின் ட்ரூடோ"தற்போது இந்திய மக்கள் துன்பகரமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். ஆம்புலன்ஸ் வசதிகள், கரோனா பாதுகாப்பு உபகரணங்களுக்காக 60 கோடி ரூபாயை வழங்குகிறோம். மேலும் உதவிகள் செய்ய கனடா அரசு தயாராக இருக்கிறது" என ட்வீட் செய்துள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவுடன் உறுதியாக துணை நிற்போம்' சீனா அரசு!