உலகம் முழுவதிலும் கோவிட்-19 வைரஸின் பெருந்தொற்று பரலால் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் நூறு நாடுகளுக்கு மேல் பரவி இருக்கும் இந்த பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
கனடாவில் 324 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 157 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டிலிருந்து பயணிகள் கனடாவிற்குள் வருவதற்கு தற்போது தடைவிதிக்கப்படுவதாகவும் மேலும் மற்ற நாடுகளிலிருந்து வரும் முக்கிய பிரதிநிதிகள், அமெரிக்கர்கள், கனடாவைச் சேர்ந்த குடும்பத்தினர் ஆகியோருக்கு இந்த தடையில் இருந்து விலக்கு உண்டு எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
அதையடுத்து அமெரிக்கா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளிலிருந்துவரும் விமானப் பயணிகள் நன்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும். கனடா நாட்டு குடிமக்களில் நாடு திரும்ப முடியாமல் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுவதோடு, நாடு திரும்பியர்கள் அனைவரும் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: கரோனாவால் ஈரானில் அதிகரிக்கும் உயிர்பலி