அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் (49) என்ற கருப்பினத்தவர், அந்நகர காவல் துறையினர் பிடியில் சிக்கியபோது சாலையிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அமெரிக்க மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் ஃப்ளாய்டின் உயிரிழப்புக்கு நீதி கோரி, கருப்பின அமெரிக்கர்கள் மீதான வெள்ளை இனவெறிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியவாறு அந்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் இறுதிச் சடங்கின் செலவை ஏற்றுக்கொள்ள முன்னாள் பாக்சிங் சாம்பியன் ஃப்ளாய்ட் மேவெதர் முன்வந்துள்ளார். மேலும், ஜார்ஜின் நினைவஞ்சலி நடத்துவதற்கான பணத்தை கொடுக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜார்ஜ் குடும்பத்துடன் மேவெதர் தனிப்பட்ட முறையில் தொடர்பு வைத்திருப்பதாக மேவெதர் புரோமோஷன் நிறுவன தலைமைச் செயல் அலுவலர் லியோனார்ட் எலெர்பே கூறினார். முன்னதாக, ஃப்ளாய்ட் மேவெதர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சக பாக்சரின் இறுதிச் சடங்குக்கு தேவையான நிதியுதவியை வழங்கினார் என்பது நினைவுக்கூரத்தக்கது.
இதையும் படிங்க : அமெரிக்காவுடன் பணியாற்ற விரும்புகிறோம் - உலக சுகாதார அமைப்பு