சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் என்ற தொற்றுநோய் தற்போது உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன.
இந்தச் சூழலில், அமெரிக்க மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்குடன் அந்நாட்டுப் பிரதிநிதிகள் சபையில் (கீழ் சபை) கொரோனா நிவாரண மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படும் அமெரிக்கர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை, இலவசப் பரிசோதனை, குறைந்த ஊதியம் வாங்கும் கர்ப்பிணிகள், அவர்களது குழந்தைகள், மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.
அமெரிக்காவில் கோவிட்-19 வைரஸால் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கொரோனா எதிரொலி: பிகாரில் 144 தடை உத்தரவு