ஈராக் பிரதமர் முஸ்தபா அல் கதிமியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜூலை 26ஆம் தேதி சந்திக்கிறார். இந்த சந்திப்பு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் நடைபெறுகிறது.
இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்படும் என்றும், கல்வி, சுகாதாரம், கலாசாரம், சூழியல், அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு சார்ந்த அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன் பதவியேற்புக்குப்பின் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் தற்போது வெளியேறியுள்ள நிலையில், ஈராக் உடனான கொள்கை உறவு குறித்து அமெரிக்கா எடுத்துள்ள நிலைப்பாட்டை சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் ஜோ பைடன், முஸ்தபா அல் கமிதி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒலிம்பிக் கிராமத்தில் கரோனா பாதிப்பு!