வாஷிங்டன்: இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றபின் முதன்முறையாக நேற்று (செப். 9) சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் தொலைபேசியில் உரையாடினார்.
இந்த அழைப்பு இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவதற்காக நடைபெற்றது. 90 நிமிடங்கள் நீடித்த உரையாடலில், கரோனா தொற்றைக் கையாளுதல், பாதுகாப்பு மீறல்கள், வர்த்தகப் போர் குறித்து விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, இரு நாடுகளும், தங்களுக்கு இடையேயான போட்டியை வரவேற்கிறோம். ஆனால், இந்தப் போட்டி மோதலாக மாற விரும்பவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஜி ஜின்பிங்கின் கூற்றுப்படி, அமெரிக்காவின் நடவடிக்கைகள் சீனாவால் தவறாகப் புரிந்துகொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
ஜோ பைடன் தொடக்கத்திலிருந்தே சீனா மீது அதிக கவனம் செலுத்திவருகிறார். அவர் பசிபிக் நட்பு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த விரும்புகிறார். அமெரிக்கா, சீனா நாடுகளின் உலகளாவிய வர்த்தகத்தையும், முக்கியத்துவத்தையும் கருத்தில்கொண்டு, இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்தாண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்கூட்டத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார். இதனால் அமெரிக்கா-சீனா நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ட்ரம்ப் நியமித்த 18 ராணுவ அலுவர்களை நீக்கிய பைடன்