வாஷிங்டன் (அமெரிக்கா): ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசியப் பாதுகாப்பு குழுவுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "ஆப்கானிஸ்தானில் நிலவும் பாதுகாப்பு சூழல், பயங்கரவாத செயல்பாடுகள், மீட்புப் பணி, வெளியுறவு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து அதிபர் ஜோ பைடன் தனது தேசியப் பாதுகாப்பு குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மீட்புப் பணி தொடர்பாக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கன் வாழும் அமெரிக்கர்களுக்கு ஓர் கோரிக்கை
ஆப்கன் தாலிபான்களின் கட்டுக்குள் வந்ததிலிருந்து அங்கிருந்து வெளியேற ஆயிரக்கணக்கானோர் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு தொடர்ந்து கூட்டம் அதிகரித்துவருவதால், தாலிபான் தனது படைகளை வைத்துக் கூட்டத்தை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகிறது.
-
This morning, the President met with his national security team to discuss the security situation in Afghanistan, counterterrorism operations, evacuation efforts, and intensive diplomatic efforts to finalize agreements with additional third-party country transit hubs. pic.twitter.com/Gcff8h8dUa
— The White House (@WhiteHouse) August 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This morning, the President met with his national security team to discuss the security situation in Afghanistan, counterterrorism operations, evacuation efforts, and intensive diplomatic efforts to finalize agreements with additional third-party country transit hubs. pic.twitter.com/Gcff8h8dUa
— The White House (@WhiteHouse) August 21, 2021This morning, the President met with his national security team to discuss the security situation in Afghanistan, counterterrorism operations, evacuation efforts, and intensive diplomatic efforts to finalize agreements with additional third-party country transit hubs. pic.twitter.com/Gcff8h8dUa
— The White House (@WhiteHouse) August 21, 2021
காபூல் விமான நிலையத்தில் அசாதாரண சூழல் நிலவுவதால், அங்கு அமெரிக்கர்கள் யாரும் செல்ல வேண்டாம். தூதரகம் மற்றும் ராணுவத்தின் வழிகாட்டுதலுடன் அமெரிக்கர்கள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என அமெரிக்க வெளியுறவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதையும் படிங்க: தேவைப்பட்டால் தாலிபானுடன் இணைந்து செயல்படுவோம் - போரிஸ் ஜான்சன்