அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனை வழிநடத்த முதல் முறையாக பெண் தலைவர் ஒருவரை நியமிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அமெரிக்க வரலாற்றின் திருப்புமுனையாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க தலைவர்களால் மைக்கேல் ஃப்ளூர்னோய் என்பவர் இப்பதவிக்கு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறார். அதிபர் ட்ரம்ப் நியமனம் செய்த ஐந்து ஆண் தலைமைகளின் அதிகாரத்திற்கு மாற்றாக இவரின் தேர்வு இருக்கும் என கணிக்கப்படுகிறது.
ஃப்ளூர்னோய் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் பென்டகனின் வரவுசெலவு திட்டங்கள், கரோனா தடுப்பூசி விநியோகம் ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். இதுகுறித்த அறிவிப்பு இன்னும் சில நாள்களில் ஜோ பைடன் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.