ETV Bharat / international

திறந்த மனம், பொறுமையின்மை, நம்பிக்கையுடன் இருங்கள்: சுந்தர் பிச்சை - அமெரிக்க செய்திகள்

"பொறுமையின்மையே தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி ஒரு தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை, அடுத்த தலைமுறை உருவாக்க உதவும். பொறுமையின்றியே இருங்கள். அதுவே உலகிற்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும்" என இந்த ஆண்டு பட்டம் பெறும் மாணவர்களுக்கு சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை
author img

By

Published : Jun 9, 2020, 3:40 PM IST

Updated : Jun 9, 2020, 4:05 PM IST

கரோனா பெருந்தொற்றின் மத்தியில், கல்லூரிகளின் பெரும்பாலான பட்டமளிப்பு விழாக்கள் மெய்நிகர் வடிவிலும், காணொலி வாயிலாகவும் நடைபெற்று வரும் நிலையில், கூகுளின் வீடியோ தளமான யூ-ட்யூப், இந்த வருடம் பட்டம் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மெய்நிகர் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா, கொரிய பாப் குழு பி.டி.எஸ், பாடகர்கள் பெயான்ஸே, லேடி காகா, அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் எம் கேட்ஸ், முன்னாள் வெளியுறவு செயலாளர் கொண்டலீசா ரைஸ், சமூக ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மாணவர்களுடன் உரையாடிய கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சுந்தர் பிச்சை, "நீங்கள் கற்பனை செய்த பட்டமளிப்பு விழா இது அல்ல என்பது எனக்குத் தெரியும். நீங்கள் இத்தனை வருடங்கள் பெற்ற அறிவை கொண்டாட வேண்டிய ஒரு தருணத்தில், நீங்கள் இழந்ததை எண்ணி வருத்தப்படக்கூடிய நிலையில் பலர் இருக்கலாம். நாம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் வாழ்க்கைத் திட்டங்கள், வேலை, அனுபவம் ஆகியவற்றைத் தாண்டி, இது போன்ற இருண்ட தருணங்களில், நம்பிக்கையைக் கண்டறிவது மிகக் கடினம்.

இந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் திறந்த மனதுடனும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். அதை செய்ய முடிந்தால், நீங்கள் இழந்தவற்றிற்காக அல்லாமல், நீங்கள் மாற்றியவைகளுக்காக வரலாறு 2020ஆம் ஆண்டு மாணவர்களான உங்களை நினைவில் வைத்திருக்கும். இவை அனைத்தையும் மாற்றும் வாய்ப்பு உங்களிடம் உள்ளது. நீங்கள் இதை செய்வீர்கள் என எனக்கு நம்பிக்கை உண்டு" என தெரிவித்தார்.

தொடர்ந்து, “1920ஆம் ஆண்டு பெருந்தொற்றின் நடுவே பட்டம் பெற்ற மாணவர்கள், 1970 வியட்நாம் போரின் இடையே பட்டம் பெற்றவர்கள், 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது பட்டம் பெற்றவர்கள் என இதேபோன்ற அமெரிக்காவின் பல நெருக்கடி கால கட்டத்தின் இடையே பட்டம் பெற்ற மாணவர்கள், அனைவருமே வெற்றி பெற்றனர். எனவே நீங்களும் நம்பிக்கையுடன் காத்திருங்கள்.

ஒரு தலைமுறையின் முன்னேற்றம் தான், அடுத்த தலைமுறையினருக்காக அடித்தளமாக அமைகிறது. இதை உணராமல் மக்கள் அடுத்த தலைமுறையினரை குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஒரு புதிய மக்கள் கூட்டம் வந்து இந்த சாத்தியங்கள் அனைத்தையும் உணர்த்த வேண்டும். தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள்கூட உங்களை விரக்தியடையச் செய்து பொறுமையிழக்கச் செய்பவையாக இருக்கலாம்.

இந்த பொறுமையின்மையை அப்படியே தக்க வைத்துக் கொள்ளுங்கள். அதுவே அடுத்த தொழில்நுட்பப் புரட்சியை உருவாக்கி, என் தலைமுறை கனவு காண முடியாத விஷயங்களை நீங்கள் உருவாக்க உதவும். பொறுமையின்றியே இருங்கள். அதுவே உலகிற்கு தேவையான முன்னேற்றத்தை உருவாக்கும்" என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "திறந்த மனதுடன் இருப்பவரால்தான், தான் விரும்புவதை கண்டறிய முடியும். எனவே, எல்லாவற்றையும் விட இவ்வுலகில் உங்களை உற்சாகப்படுத்தும் விஷயத்தைக் கண்டுபிடிக்க நேரம் ஒதுக்குங்கள். உங்கள் பெற்றோர் உங்களிடம் எதிர்ப்பார்க்கும் விஷயம் அல்லாமல், உங்கள் நண்பர்கள் அனைவரும் செய்கிற விஷயத்தையோ அல்லது சமூகம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் விஷ்யத்தையோ நோக்கி செல்லுங்கள்” என்றும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவில் தனது ஆரம்ப கால ஆண்டுகள், அவற்றில் தான் சந்தித்த சவால்கள் குறித்து பேசிய அவர், "நான் ஸ்டான்ஃபோர்டில் படிப்பதற்காக, என் தந்தை அவரது ஒரு வருட சம்பளத்திற்கு சமமான தொகையை, அமெரிக்கா வருவதற்கான எனது விமான பயணச்சீட்டில் செலவிட்டார். அதுவே எனது முதல் விமானப்பயணம்.

அதிர்ஷ்டம் தவிர்த்து, தொழில்நுட்பத்தின் மீதான ஆழ்ந்த ஆர்வமும், திறந்த மனதுமே என்னை அங்கிருந்து இந்த இடத்திற்கு அழைத்து வந்துள்ளது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இன சமத்துவத்திற்கு ஆதரவு - சுந்தர் பிச்சை

Last Updated : Jun 9, 2020, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.