ETV Bharat / international

உலகின் தலைசிறந்த வர்த்தக  தலைவர்களின் பட்டியலில் 'பேட்மேன்' அருணாச்சலம் முருகானந்தம்!

அமெரிக்கா: அமெரிக்காவின் வார இதழ் வெளியிட்டுள்ள உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலில் 'பேட்மேன் அருணாச்சலம் முருகானந்தம் முதல் 50 இடத்திற்குள் தேர்வாகியுள்ளார்.

author img

By

Published : Apr 21, 2019, 12:36 PM IST

Updated : Apr 21, 2019, 12:54 PM IST

'பேட்மேன்' அருணாச்சலம் முருகானந்தம்

அமெரிக்காவின் பிரபல வார இதழ்களில் ஒன்றான ஃபார்ட்டுயூன், ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த வர்த்தக தலைவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான தலைசிறந்த தலைவர்களின் டாப் 50 பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. அதில் ‘பேட்மேன்’ அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தைப் பிடித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த 'பேட்மன்' அருணாச்சலம் முருகானந்தம், எழை, எளிய பெண்கள் பயன்படுத்தும் வகையில் மலிவான நாப்கினைத் தயாரித்து உலகின் கவனத்தை ஈர்த்தவர். இதற்காக மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

இவரது வாழ்கையைத் தழுவி உருவாக்கப்பட்ட 'பீரியட் எண்ட் ஆப் செண்டன்ஸ்' ஆவணப் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த ஆவணப் படத்தை மையமாகக் கொண்டு அக்‌ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் உருவான பேட்மேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபார்ட்டுயூன் வார இதழின் பட்டியலில் பில் கேட்ஸ், ஜெசிண்டா ஆர்டென், ராபர்ட் முல்லர், மெலிண்டா கேட்ச், போனி மா என பலர் இடம் பெற்றுள்ளனர்.

Intro:Body:

http://www.puthiyathalaimurai.com/news/world/62377-arunachalam-muruganantham-in-fortune-s-top-50-list.html

Conclusion:
Last Updated : Apr 21, 2019, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.