ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 90 தொகுதிகளுக்கு 10 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
காஷ்மீரில் காங்கிரஸ் தேசிய மாநாடு கட்சி , தேசிய சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. பாஜக, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிடுகின்றன. இதனால், அங்கு மும்முனைப் போட்டி நிலவவியது. தற்போது, வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகளில் நேரடித் தாக்கம் இருப்பதால் 5 நியமன உறுப்பினர்கள் மீது கவனம் திரும்பியுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் மறுசீரமைப்புச் சட்டம் பிரிவு 15ன் படி, சட்டப் பேரவையில் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லையென்றால், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில் 2 பெண் உறுப்பினர்களை ஆளுநர் நியமிக்க வேண்டும். மீதமுள்ளவர்களில் காஷ்மீரில் குடியேறியவர்கள் மற்றும் பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் (PoJK) அகதிகள் அடங்குவர்.
வேட்புமனுத்தாக்கல் செயல்முறை புதுச்சேரியை போன்றது. இங்கு லெப்டினன்ட் கவர்னர் (lieutenant governor) 3 எம்எல்ஏக்களை சட்டசபைக்கு பரிந்துரை செய்ய முடியும். காங்கிரஸ் தலைமையிலான அரசைக் கலந்து ஆலோசிக்காமல் புதுச்சேரியின் அப்போதைய லெப்டினன்ட் கவர்னர், கிரண் பேடியின் உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017-2018ல் வழக்குத் தொடரப்பட்டது. எம்எல்ஏக்களை நியமனம் செய்வதற்கு முன், மத்திய, மாநில அரசை கலந்தாலோசிக்கவில்லை என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் இதில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.
வாக்குரிமை: சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் ஜம்முவில் 43 மற்றும் காஷ்மீரில் 47 என 90 தொகுதிகளுக்கு 64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இணையாக வாக்களிக்கும் உரிமையை, 5 நியமன உறுப்பினர்கள் பெற்றுள்ளனர்.
இது குறித்து, முன்னாள் ஜம்மு மற்றும் காஷ்மீர் சட்ட செயலாளர் முகமது அஷ்ரப் மிர் ( Mohammad Ashraf Mir ) கூறுகையில், “அரசாங்கம் அமைப்பதற்கு முன் லெப்டினன்ட் கவர்னர் 5 உறுப்பினர்களை பரிந்துரை செய்யலாம். ஜம்மு மற்றும் காஷ்மீர் மறுசீரமைப்பில், மத்திய அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் லெப்டினன்ட் கவர்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆலோசனையின்றி அவர்களை நியமிக்க அனுமதிக்கப்படுகிறார்.
இதையும் படிங்க: ஹரியானா, ஜம்மு - காஷ்மீரில் ஆட்சியமைக்கப் போவது யார்? கருத்துக் கணிப்பு முடிவுகள்
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை போல, 87 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்திற்கு, 2 பெண்கள் அரசாங்கத்தின் பரிந்துரைகளின் பேரில் பரிந்துரைக்கப்பட்டனர். ஆனால், ஜம்மு மற்றும் காஷ்மீரில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் உதவி மற்றும் ஆலோசனை இல்லாமல் லெப்டினன்ட் கவர்னர் முடிவெடுக்க அனுமதிக்கப்படுகிறது. எனவே, ஆட்சி அமைக்கும் முன் அவர்களை நியமனம் செய்வது அவரது விருப்பமாகும். அவர்களின் வாக்குகள் அரசாங்க அமைப்பில் கணக்கிடப்படும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “5 பரிந்துரைகளுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு, காஷ்மீரில் (PoK) காலியாக உள்ள 24 இடங்கள் உட்பட சட்டசபையின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது. அரசு அமைக்கப்படுவதற்கு முன்பே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு பதவியேற்றால் ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை 46ல் இருந்து 48 ஆக உயரும்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள சட்டசபைக்கு எல்லைகளை நிர்ணயித்த எல்லை நிர்ணய ஆணையம், ஜம்முவுக்கு 6 இடங்களையும், காஷ்மீருக்கு ஒரு இடத்தையும் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் பள்ளத்தாக்கு ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற பாஜகவின் நீண்டகாலக் கோரிக்கையை உணர்ந்து, இரு பகுதிகலையும் ஒன்றுக்கொன்று இணையாகக் கொண்டு வந்தது.
இதுவரையில் ஜம்முவின் தோடா பகுதியைச் சேர்ந்த முன்னாள் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் மட்டுமே முதலமைச்சராக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை பெரும்பான்மையை தாண்டினால் ஜம்முவில் இருந்து இந்து முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது” என்றார்.
எதிர்க்கட்சிகளின் கவலை & பாஜகவின் பதில்: "எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டுவதற்காக இந்த ஏற்பாடு வெளியிடப்பட்டுள்ளது" என்று காங்கிரஸ் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா தெரிவித்துள்ளார். பெரும்பான்மையினரை, சிறுபான்மையினராக மாற்றுவதற்கு இந்த 5 நியமன உறுப்பினர்களை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
ராஜ்யசபாவில், அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் இந்திய குடியரசு தலைவரால் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால் இங்கே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு உறுப்பினர்களை நியமிக்க உரிமை இல்லை என்ற தன்னிச்சையான விதியைக் கொண்டு வந்துள்ளனர். ஆனால், பாஜகவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான கவிந்தர் குப்தா தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை விரக்தி எனக் குறிப்பிடுகிறார்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.