லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆப்கானிஸ்தான் நாடு தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் ஆப்கன் மக்கள் உள்பட பல்வேறு நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்துவருகின்றனர். இதனிடையே தாலிபான்களின் வன்முறை செயல்களுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
இந்த நிலையில் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இதையடுத்து அவர் முதல் பதிவிலேயே, தாலிபான் குறித்து ஆப்கன் சிறுமி ஒருவர் தனக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தில், 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எங்கள் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தை இழந்தோம். அனைவரின் வாழ்க்கையும் இருண்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இதுகுறித்து ஏஞ்சலினா, "உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக போராடும் மக்களின் குரல்களை பகிர்வதற்காக நான் இங்கு வந்துள்ளேன். இந்தக் கடிதம் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறுமியிடமிருந்து இருந்து எனக்கு அனுப்பப்பட்டது.
தற்போது, அந்நாட்டு மக்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கருத்துக்களை பகிர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு உதவ வழிகளை தேடுவேன். அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். எனக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமெரிக்கர்களைப் போலவே ஆப்கனியர்களை மீட்பதும் முக்கியம் - ஜோ பைடன்