அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவை என்ற நிலையில், பைடன் 284 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
இந்தத் தேர்தல் வெற்றி மூலம் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக பொதுமக்களின் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார்.
அதில்,”செழுமையான நாட்டை உருவாக்க எங்களை வெற்றியடைய செய்ததற்கு நன்றி. நம்பிக்கை, ஒற்றுமை, கண்ணியம், அறிவியல் மட்டுமின்றி உண்மையையும் தேர்ந்தெடுத்து அனைத்தையும் தெளிவுப்படுத்திவிட்டீர்கள்.
உலகம் முழுவதும் அமெரிக்காவின் தேர்தலை உற்றுநோக்கிக் கொண்டிருந்தபோது, உங்களது உணர்வுமிக்க வாக்குகளை ஜனநாயக கட்சிக்கு அளித்து அமெரிக்காவிற்கு புதிய விடியலை தந்துவிட்டீர்கள்” என்றார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய ட்ரம்ப்: ’லூசர்..லூசர்..’ எனக் கத்திய பைடன் ஆதரவாளர்கள்