உலகின் மிகப் பெரிய ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான அமேசான், அமெரிக்காவில் மருத்து டெலிவரி சேவையில் இன்று (நவ.17) நுழைந்துள்ளது. இதன்படி அமெரிக்கர்கள் அமேசான் தளத்தில் மருந்துகளை ஆர்டர் செய்யலாம்.
அவ்வாறு ஆர்டர் செய்யப்படும் மருந்துகள் ஒரு சில நாள்களில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு டெலிவரி செய்யப்படும். இருப்பினும், தவறாக உபயோகிக்கப்படக்கூடிய மருந்துகள், தளத்தில் விற்பனை செய்யப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமேசான் ப்ரைம் உறுப்பினர்கள் அமேசான் தளத்தில் மட்டுமின்றி, அருகில் இருக்கும் மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை வாங்கினாலும் சலுகை உண்டு என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல மருந்துக் கடை உரிமையாளர்களும் அமேசான் தளத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு வியாபாரத்தைத் தொடங்கலாம்.
மருத்து டெலிவரி சேவையில் அமேசான் நிறுவனம் நுழைந்ததைத் தொடர்ந்து CVS Health Corp, Walgreens உள்ளிட்ட பல முக்கிய அமெரிக்க மருந்தக நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.
முன்னதாக, கடந்த 2018ஆம் ஆண்டு மருந்து டெலிவரி நிறுவனமான PillPackஐ அமேசான் 750 மில்லியன் டாலருக்கு வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய டேப்லெட், லேப்டாப் வெளியீடு!