கடந்த ஜனவரி 26ம் தேதி, 35 வயதான வெனிசுலாவின் எதிர்கட்சித் தலைவரான கெயிடோ தன்னை இடைகால அதிபராக பதவியேற்றுக் கொண்டார், இதை ஐரோப்பிய ஒன்றியம் அதரித்து. ஆனால் தற்போதைய அதிபர் மட்ரோ இன்னும் பதவி விலகாத நிலையில் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
ஏற்கனவே கெயிடோவுக்கு ஆதரவாக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை அளிப்பதாக அறிவித்திருந்தன. இதை தடுப்பதற்காக வெனிசுலாவின் எல்லைகளை நேற்று அடைத்தார் அதிபர் மட்ரோ.
இந்நிலையில் இன்று ஏராளமான டரக்குகளில் உலக நாடுகளின் மனிதாபிமான உதவிகள் வெனிசுலாவின் எல்லையை அடைந்துள்ளது.
வெனிசுலாவுக்குள் எடுத்து செல்ல முடியாமல் கொலம்பியா எல்லையருகே முடங்கியுள்ளன.