நியூயார்க் (அமெரிக்கா): இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் ஹென்ரிட்டா ஃபோர் வெளியிட்ட அறிக்கையில், "4.2 மில்லியன் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை. இதில், 60 விழுக்காட்டுக்கும் மேல் பெண் குழந்தைகள்தான். ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகள் கல்வி கற்பதில் இருந்து விலக்கிவைக்கப்படுகிறார்கள். இதன்மூலம் அவர்கள் அவர்களுக்கான வாய்ப்புகளை இழக்கிறார்கள்.
ஆண்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும், தங்களது கல்வி, திறன்களை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்புகளை யுனிசெஃப் நிறுவனம் செய்யும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தாலிபான் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு ஆண் குழந்தைகளுக்கு மட்டுமானதாக உள்ளதென்றும், பெண்கள் பள்ளிக்கு திரும்பும் நாள் குறித்த விவரங்கள் இல்லையென்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாலிபான் ஆட்சியைக் கைப்பற்றியவுடன், பெண் குழந்தைகளுக்கான கல்வியை மறுக்கமாட்டோம் என உறுதியளித்திருந்தனர். அந்த உறுதியை தாலிபான்கள் மீறியுள்ளனர் என்பதே தற்போதைய அறிவிப்பு காட்டுகிறது.
இதையும் படிங்க: எங்கள் துணை பிரதமர் உயிரோடுதான் இருக்கிறார் - தாலிபான் அறிவிப்பு