அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரின் வடக்கே சுமார் 270 கிலோ மீட்டர் தொலைவில், 6.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு புவியியல் கணக்கெடுப்பு முகமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், லாஸ் ஏன்ஞல்ஸ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டதாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்ததாகவோ, உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவோ எந்த ஒரு தகவலும் வெளிவரவில்லை.
இதுகுறித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் விடுத்த ட்விட்டர் பதிவில், " தென் கலிபோர்னியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறித்து எனது கவனத்துக்கு எந்த தகவலும் வரவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.