தென் அமெரிக்கா நாடான சிலியில் நகரில் சிறிய ரக விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது. தலைநகர் சாண்டியாகோவில் இருந்து 1000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பியூர்டோ மான்டில் உள்ளூர் நேரப்படி காலை 10.50 மணிக்கு நடைபெற்ற இந்த விபத்தில் விமானி மற்றும அதில் பயணித்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.