கரோனாவின் பரவல் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த ஆராய்ச்சியில் பல முன்னணி நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். கரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வர நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனையில் உள்ளன.
அந்த வகையில், உயிரி தொழில்நுட்ப நிறுவனமான மாடர்னா ஆராய்ச்சி நிறுவனம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவை தேசிய சுகாதார நிறுவனங்களின் ஒரு பகுதியான NIAID உடன் இணைந்து கரோனா தடுப்பூசி மருந்து ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த மருந்துக்கு mRNA-1273 எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதலாம், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது ஆறாம் கட்ட பரிசோதனையை மாடர்னா ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர். அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சித் தளங்களில் நடத்தப்படும் இந்தச் சோதனையில், கரோனா தொற்று இல்லாத 30 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த தடுப்பூசி மருந்தால் கரோனா உயிரிழப்பைத் தடுக்க முடியுமா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை நடைபெற்றுவருகின்றன. அதேபோல், அவர்களின் உடல்நிலையும் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகிறது. இந்த mRNA-1273 மருந்து பாதுகாப்பானது, நோய் எதிர்ப்புத் திறன் கொண்டது என NIAID அமைப்பில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் அந்தோனி எஸ். ஃபவுசி முன்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சித் தளங்களில் நடத்தப்படும் இந்தத் தடுப்பூசி மருந்து சோதனையில் கரோனாவுக்கு எதிராக உருவாக்கப்படும் mRNA-1273 தடுப்பூசி மருந்து ஆராய்ச்சியின் இறுதிக்கட்ட சோதனைக்கு 6 பேர் உள்படுத்தப்படுவதாக நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சோதனையில் கரோனா வைரஸை இம்மருந்து கட்டுக்குள் கொண்டு வரும் பட்சத்தில் அடுத்த நகர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 3ஆம் கட்ட பரிசோதனையில் நான்கு தன்னார்வலர்கள் உள்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 3ஆம் கட்ட பரிசோதானையில் கரோனாவுக்கு எதிரான mRNA-1273 தடுப்பூசி மருந்து!