அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதி திங்கள்கிழமை ராணுவத்தில் பணியாற்றி உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்வது வழக்கம். அந்த வகையில், ராணுவ வீரர்களின் நினைவைப் போற்றும் விதமாக சிகாகோ நகரில் கூடியிருந்த மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 கொல்லப்பட்டனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு முதலே இந்த நினைவு தினத்தின்போது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் மக்கள் வீடுகளுக்குள் இருக்க அரசு உத்தரவிட்டிருந்தபோதிலும், கடந்தாண்டை விட இந்தாண்டு உயிரிழந்தவர்கள், காயம்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2015ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேரும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேரும் கொல்லப்பட்டனர். 2017, 2018 ஆம் ஆண்டு முறையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஆறு , ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: இந்திய அமெரிக்க தம்பதி கண்டுபிடித்த விலை மலிவான வென்டிலேட்டர்