ETV Bharat / international

ஜிம்பாப்வே முன்னாள் அதிபர் 95 வயதில் காலமானார் - #zimbabwe former president dies

சிங்கப்பூர்: ஜிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே உடல்நலக் குறைவால் சிங்கப்பூரில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95.

mugabe
author img

By

Published : Sep 6, 2019, 3:10 PM IST

Updated : Sep 6, 2019, 3:27 PM IST

ஆப்ரிக்க ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவருமான ராபர்ட் முகாபே சிங்கப்பூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

இதுகுறித்து ஜிம்பாப்வே பிரதமர் எமர்சன் நங்காக்வா, "ஜிம்பாப்வேவின் தேசத் தந்தையும், முன்னாள் அதிபருமான தோழர் ராபர்ட் முகாபே அவர்களின் மறைவை மிக வருத்தத்தோடு அறிவிக்கிறேன்.

சுதந்திர போராட்டத்தின் முன்னோடியும், அனைத்து ஆப்ரிக்கர்களின் சொந்தக்காரருமான தோழர் முகாபே, நமது மக்களின் விடுதலைக்காகவும், வளர்ச்சிக்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவராவார். ஜிம்பாப்வே, ஆப்ரிக்கா கண்டத்தின் வளர்ச்சிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பை என்றும் மறக்க மாட்டோம். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்றார்.

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திலிருந்த ஜிம்பாப்வே நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடியவர் முகாபே. 1980 சுதந்திரத்துக்குப் பிறகு அதிபராக தேர்ந்தெடுக்க ப்பட்டார்.

பின்னர், 80-களில் இவரது தலைமையிலான அரசு ஜிம்பாப்வேவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு சென்றது. பின்னாளில் ஊழல், அடக்கு முறை, வன்முறை, அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளிட்டவற்றால் ஜிம்பாப்வே நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றதாக முகாபே மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2017ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து முகாபேவின் 37 ஆண்டுகால ஆட்சியும், அவரது அரசியல் வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது.

Intro:Body:

https://www.ndtv.com/world-news/zimbabwes-former-president-robert-mugabe-dies-at-95-official-2096508

Robert Mugabe, Former Prime Minister of Zimbabwe passes away at the age of 95, at a hospital in Singapore: Zimbabwean media.

Conclusion:
Last Updated : Sep 6, 2019, 3:27 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.