சூடான் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பழங்குடி மக்களிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டது . பானி அமர் மற்றும் நுபா பழங்குடியின மக்களிடையே நடந்த இந்த சண்டையில் 37 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
சண்டைக்கான முக்கிய காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், அந்நாட்டு அரசு கலவரத்தைக் கட்டுப்படுத்தாத ஆளுநரை பணிநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அங்கு அவசர கால பிரகடனத்தை செயல்படுத்தி, மோதல் தொடர்பாக விசாரணை நடத்தவும் அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.