ஒமர் அல் பஷீரின் எதேச்சதிகார ஆட்சியை கவிழ்த்த சூடான் ராணுவம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்தல்லா ஹம்டோக்கை பிரதமராக நியமித்தது. தர்ஃபூர் போரின்போது போர் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒமர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பாதுகாவலர்களுடன் தலைநகர் கர்டோம் பகுதியில் சாலை வழியாக காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் கார் சென்ற பாதையில் பெரும் சத்தத்துடன் குண்டி வெடித்தது. இதில் அப்தல்லாவின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை, அவர் பத்திரமாக உள்ளார் என அவரது குடும்பத்தார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. சூடானில் இதனால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: 'சவுதி மன்னர் மரணிக்கவில்லை'- வதந்திக்கு முற்றுப்புள்ளி