சோமாலியா தலைநகர் மொகாதிஹூவில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தெற்கே அமைந்துள்ள பலிடோக்லே நகரில் அமெரிக்க சிறப்பு ராணுவப் படையினர் ராணுவ தளம் ஒன்றை நிர்வகித்து வருகின்றனர்.
இந்நிலையில், சில மணி நேரத்துக்கு முன்பாக இந்த ராணுவ தளம் மீது வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதேபோன்று, தலைநகர் மொகாதிஹூவில் இத்தாலி ராணுவ வாகனங்கள் மீதும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரு தாக்குதலுக்கும் அல்-ஷோபாபா போராளிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர். இது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.