தென்னாப்பிரிக்கா அதிபர் சிரில் ரமபோசாவுக்கு கோவிட்-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு கோவிட் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிபர் சிரிலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், அவர் தைரியத்துடன் சிகிச்சைக்கு ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிபர் சிரில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியவர்.
அன்மையில், மேற்கு ஆப்ரிக்க நாடுகளான நைஜீரியா, கானா, செனகல் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார். தனது உடல் நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் சிரில், தனது பாதிப்பு நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை எனவும், பெருந்தொற்று விவகாரத்தில் யாரும் அலட்சியம் காட்ட வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், தொற்று பாதித்த தனது நண்பரான தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் விரைவில் குணமடைய வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
-
Wishing you a speedy recovery my friend, President @CyrilRamaphosa. https://t.co/mYudl71Dmz
— Narendra Modi (@narendramodi) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Wishing you a speedy recovery my friend, President @CyrilRamaphosa. https://t.co/mYudl71Dmz
— Narendra Modi (@narendramodi) December 13, 2021Wishing you a speedy recovery my friend, President @CyrilRamaphosa. https://t.co/mYudl71Dmz
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
உருமாறிய கோவிட்-19 தொற்றான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு பரவத்தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக ஆப்ரிக்கா நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் தற்போது நான்காவது கோவிட் அலை ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த ஒரே நாளில் 37,875 பேருக்கு தினசரி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிகார அத்துமீறல்: காரிலிருந்து இறங்கிவந்து இளைஞரை அறைந்த எம்எல்ஏ!