அபுஜா: மேற்கு ஆப்பிரிக்காவின்நைஜீரியாவில் உள்ள உக்போகிடி எண்ணெய் வயலிலிருந்து, 20 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய், 10 மாலுமிகளுடன் புறப்பட்ட டிரினிட்டி ஸ்பிரிட் என்னும் சரக்கு கப்பல் இன்று டெல்டா மாநில கடற்கரை அருகே திடீரென வெடித்தது. தகவலறிந்த கடலோர காவல்படையினர், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
லட்டக்கணக்கான பீப்பாய்கள் கப்பலின் உள்ளே இருப்பதால், கப்பலை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகும் வீடியோக்கள் கப்பல் மூழ்கும்படியாகவும், அதிலிருந்த எண்ணெய் கடலில் கலக்கும்படியும் உள்ளது. இந்த விபத்து தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. 10 மாலுமிகளில் நிலையும் தெரியவில்லை. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.
-
VIDEO: SEPCOL’s oil production vessel explodes in Niger Delta pic.twitter.com/5X37nbXXVU
— TheCable (@thecableng) February 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">VIDEO: SEPCOL’s oil production vessel explodes in Niger Delta pic.twitter.com/5X37nbXXVU
— TheCable (@thecableng) February 3, 2022VIDEO: SEPCOL’s oil production vessel explodes in Niger Delta pic.twitter.com/5X37nbXXVU
— TheCable (@thecableng) February 3, 2022
கப்பலில் உள்ள 20 லட்சம் எண்ணெய் பீப்பாய்கள் கடலில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவை கடலில் கலந்தால், கடற்கரையை ஒட்டிய 10 கி.மீட்டருக்கு கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும் என்று வல்லூனர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: ஐஎன்எஸ் கப்பல் வெடிவிபத்து: மூன்று கடற்படை வீரர்கள் உயிரிழப்பு